பிக் பாஸில் இருந்து பேட் மேன் Evicted : போட்டியாளர்களின் behavior புட்டு வைத்த ரவீந்தர் !!

பிக் பாஸில் இருந்து பேட் மேன் Evicted : போட்டியாளர்களின் behavior புட்டு வைத்த ரவீந்தர் !!

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருக்கிறார். நேற்று மக்களின் குறைந்த வாக்குகள் பெற்று அவர் வெளியேற்றப்படுவதாக விஜய் சேதுபதி கார்டை காட்டி அறிவித்தார். அவர் முன்னதாகவே முதல் வாரத்தில் நான் தான் இந்த வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபராக இருப்பேன் என தனது அனுமானத்தின் பேரில் கூறி இருந்தார். அதன்படியே, அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து அவர் வெளியே வந்ததும் போட்டியாளர்களுக்கு பல அறிவுரையும் வழங்கி இருந்தார். வெளியில் வந்த அவரிடம் விஜய் சேதுபதி பேசும்போது தன்னை விமர்சிக்கும் படி கூறினார். 'செஞ்சிட்டீங்க சார்' என அவர் விஜய் சேதுபதியை பாராட்டினார். தனது கணிப்பு பழித்துவிட்ட நிலையில், இனியாவது நீங்கள் பிக் பாஸ் கேமை விளையாட ஆரம்பியுங்கள் என்றும் கூறி இருந்தார்.

விஜய் சேதுபதி வீட்டில் இருப்பவர்கள் உடன் ரவீந்தரை பேச வைத்தார். "இப்போ அன்பை பொழிவாங்க பாருங்க" என ரவீந்தர் சொன்னது போலவே உள்ளே இருப்பவர்கள் அனைவரும் ரவீந்தரை மிஸ் பண்ணுவதாக கூறினார்கள்.

reviewer ஆக ஒவ்வொரு போட்டியாளராக உங்கள் கருத்துக்களை கூறுங்கள் என விஜய் சேதுபதி கேட்டார். "அர்னவ் நீ பக்கா fake." "ரஞ்சித் சார்.. சாமி, தங்கம் என சொல்வது strategy தான்" "தீபக்.. எதிரியை முன்னாடி அடிக்கணும்.. பின்னாடி அடிக்க கூடாது" "அருண் பிரசாத் நீ innocent மாதிரி நடிக்காத" "சத்யா இந்த ஷோவுக்கு பாடி முக்கியமில்லை, mind தான் வேணும்" "VJ விஷால் நீ தான் என்னை சமைச்சே கொன்னுட்டடா. நல்லா இருக்கு என வேறு வழி இல்லாமல் சொன்னேன் டா. இந்த வீட்டில் ஒரே ஒரு entertainer நீ தான்". "ஜெப்ரி வாயை பார்த்து பயன்படுத்து. இது உன் வாழ்க்கையையே மாத்திடும்". "பவித்ரா நீ இந்த கேம்-ல் real ஆக இரு." "சௌந்தர்யா உட்கார்ந்து பெஞ்ச் தேய்க்குறதை நிறுத்து. டான்ஸ் ஆடுவது, சமைப்பது, தூங்குவது மட்டும் கேம் இல்லை." "தர்ஷா நீ விளையாடுறது பாதி fake.. நீ fake என்பது உள்ளே இருந்த எனக்கு பச்சையா தெரிந்தது." "சுனிதா நீ honest, real. தமிழ்நாடு உன்னை கொண்டாடும்." "தர்ஷிகா நீ செம கேடி. பயங்கரமாக twist பண்ணி விளையாடுற. Manipulative ஆக இருக்காதே." "ஜாக்குலின் நான் நம்புற இரண்டாவது real person நீ தான்." "RJ ஆனந்தி பயந்து பயந்து ரொம்ப நாள் தள்ள முடியாது. சனி ஞாயிறு score செய்வது முக்கியமில்லை. மற்ற 5 நாட்கள் அதை செய்யணும்". இப்படி ஒவ்வொரு போட்டியாளர்களையும் ரவீந்தர் விமர்சித்தார், அவரது சொந்த கருத்து மட்டுமே என விஜய் சேதுபதி அதன் பிறகு ஒரு விஷயத்தை disclaimer ஆக பதிவு செய்தார்.

Tags

Next Story