பிக் பாஸ் : Eviction-ல் இருந்து காப்பாற்ற, நாமினேஷன் ஃபிரீ பாஸ் - தப்பிக்கப்போகும் நபர் யார்!

பிக் பாஸ் : Eviction-ல் இருந்து காப்பாற்ற, நாமினேஷன் ஃபிரீ பாஸ் - தப்பிக்கப்போகும் நபர் யார்!

பிக் பாஸ்

பிக் பாஸ் 8ல் யார் கெத்து டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது. இதில் மொத்தம் மூன்று லெவலாக பிரிக்கப்பட்டது. எந்த அணி அறிவில் சிறந்தது? டீம் ஒற்றுமையில் சிறந்தது? திறமையில் எந்த அணி சிறந்தது? என போட்டி நடந்தது.

இந்த போட்டியில் வெல்லும் அணி, தங்களுடைய அணியில் நாமினேட் ஆகியிருக்கும் ஒருவரை Eviction-ல் இருந்து காப்பாற்றலாம் என நாமினேஷன் ஃபிரீ பாஸ் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பிக் பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள் அணியினர் மற்றும் பெண்கள் அணியினர் கடுமையாக போட்டிகளை ஆடினர்.

முதலில் நடந்த டாஸ்கில் பெண்கள் அணி வெற்றி பெற்ற நிலையில் பின், இரண்டாவதாக நடந்த டாஸ்கில் ஆண்கள் அணி வெற்றிபெற்றது. இரு அணிகளும் சமமாக வெற்றிபெற்றதையடுத்து மூன்றவதாக நடந்துள்ள போட்டியில் பெண்கள் அணி வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் பெண்கள் அணியில் நாமினேட் ஆன ஒருவரை காப்பாற்ற, அவர்களுக்கு நாமினேஷன் ஃபிரீ பாஸ் வழக்கப்பட்டது. இதில் பெண்கள் அணி யாரை காப்பாற்ற போகிறார்கள் என்று பார்போம்.

Tags

Next Story