மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தின் லாபம் !!!

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படத்தின் லாபம் !!!

வாழை

தமிழ் சினிமாவில் சமூக நீதி தொடர்பான படங்களை எடுப்பவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். முதல் படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதை தொடர்ந்து தனுஷுடன் சேர்ந்து கர்ணன் எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதன்பின் மாமன்னன் மற்றும் வாழை என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த வாழை வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், வாழை திரைப்படத்தின் மூலம் கிடைத்த லாபம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாழை படத்தின் மூலம் ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை லாபம் கிடைத்திருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன்பைசன் என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை உருவாகி வருகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story