இஸ்லாமியர் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள் தெரிவித்த தவெக தலைவர் விஜய் !!

இஸ்லாமியர் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள் தெரிவித்த தவெக தலைவர் விஜய் !!

விஜய்

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் பண்டிகையாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது.

இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை ஆகிய நற்குணங்களை எடுத்துரைக்கும் வகையில் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளால் பக்ரீத் பண்டிகை, தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story