தனுஷ் களமிறங்கிய ராயன் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு !!

தனுஷ் களமிறங்கிய ராயன் திரைப்படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு !!

 ராயன் திரைப்படம்

தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story