நடிகர் விஜய்- க்கு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு !!

நடிகர் விஜய்- க்கு தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு !!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இயக்குனர் வெங்கட் பிரபு தனது தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் தளபதி விஜய் அண்ணா பிறந்த நாளுக்கு ஒரு சர்ப்ரைஸ்வேணாமா.. நள்ளிரவு 12.01 மணிக்கு சந்திப்போம் ஏனென்றால் இது கோட் பிறந்தநாள் ஷார்ட்ஸ் என குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி நள்ளிரவு 12 மணிக்கு கோட்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படம் நிறுவனம் வெளியிட்டது. பைக் சேஸிங்கில் இளம்வயது விஜயும் வயதான விஜயும் ஒரே பைக்கில் செல்லும் ஆக்சன் காட்சி வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ 10 லட்சம் பார்வைகளை வேகமாக நெருங்கியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "LOVE U விஜய் அண்ணா. மகிழ்வான பிறந்தநாள் வாழ்த்துகள். அன்பு, சிரிப்பு, சந்தோஷம், நம்பிக்கை, நினைவுகள் என அனைத்துக்கும் நன்றி. கடந்த ஓராண்டிற்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story