டிசம்பரில் கீர்த்தி சுரேஷ்க்கு டும் டும் டும் !!

டிசம்பரில் கீர்த்தி சுரேஷ்க்கு டும் டும் டும் !!
X

கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், அவை முற்றிலும் வதந்தி என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரனை தான் விரும்புகிறார் என்றும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்றும் வதந்திகள் பரவியது. பிறகு இது பொய்யான தகவல் என்று கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

தனது நீண்டகால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை வரும் டிசம்பர் 11ம் தேதி கோவாவில் வைத்து திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

கீர்த்தி மற்றும் ஆண்டனி கிட்டத்தட்ட 15 வருட நண்பர்கள் என்றும், கீர்த்தி சுரேஷ்க்கு பள்ளி பருவத்தில் இருந்தே ஆண்டனியை தெரியும் என்று கூறப்படுகிறது.

கோவாவில் நடைபெறும் கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் திரைபிரபலங்கள் யாரும் இல்லாமல், நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுக்கு மத்தியில் நடைபெற உள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக ரகு தாத்தா படம் வெளியானது.பேபி ஜான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் கிறிஸ்மஸ் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story