அவர் ஒரு சைக்கோ எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார் - தனுஷ் மீதுள்ள வன்மத்தை கக்கிய சுசித்ரா !

தனுஷ்
நயன்தார – விக்னேஷ் சிவன் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவண திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடியில் நேற்று வெளியானது. இந்நிலையில் இந்த ஆவணப் படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் உள்ள 3 வினாடி காட்சிகளை பயன்படுத்த அந்த படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் அனுமதிக்கவில்லை. அனுமதியின்றி காட்சியை பயன்படுத்தியதால், ரூ.10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பாக தனுஷை கடுமையாக விமர்சித்து நயன்தாரா பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில் தன் மீதுள்ள வெறுப்பால் தனுஷ் பழிவாங்குவதாக நயன்தாரா குறிப்பிட்டார். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாராவிற்கு ஆதரவாகவும், தனுஷிற்கு ஆதரவாகவும் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவின் அறிக்கை தொடர்பாக பாடகியும் நடிகையுமான சுசித்ரா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது,‘தனுஷ் நயன்தாராவிற்கு இந்த தொல்லை மட்டும் கொடுக்கவில்லை. ‘யாரடி நீ மோகினி’ படப்பிடிப்பின்போதும் தொல்லை கொடுத்துள்ளார். நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றால் தனுஷிற்கு சலாம் போட வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு சலுகையாக கட் ஆகும். மோசமான கேரவன்கள் வழங்கப்படும். தனுஷ் 50 படங்களில் நடித்துள்ளார். அப்படியானால் ஒரு படத்திற்கு 3 நடிகைகள் வீதம் மொத்தம் 150 நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்துள்ளார்.
அம்மா பாத்திரத்தில் நடித்த நடிகைகளுக்கு கூட தொல்லை கொடுத்துள்ளார். சிலருக்கு பாலியல் ரீதியான தொல்லை, சிலருக்கு தொழில் ரீதியான தொல்லை, சிலருக்கு பர்ஸனல் ரீதியாகவும் தொல்லை கொடுப்பார். சில நடிகைகளின் இமேஜினை டேமேஜ் செய்யும்படி நடந்து கொள்வார். அவர் ஒரு சைக்கோ என்பதால் எல்லா வகையிலும் தொல்லை கொடுப்பார்’ என கூறியுள்ளார். சுசித்ரா பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சுசித்ரா தனுஷ் மீதான வன்மத்தில் பேசுகிறார் என அவரது ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
