சிறகடிக்க ஆசை ஹீரோ வெற்றி வசந்த் திருமணம் - பொண்ணு யார் தெரியுமா ?

சிறகடிக்க ஆசை ஹீரோ வெற்றி வசந்த் திருமணம் - பொண்ணு யார் தெரியுமா ?

வெற்றி வசந்த்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர் சிறகடிக்க ஆசை சீரியல்.

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக தற்போது சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதில் முத்து - மீனாவாக நடிக்கும் ஜோடியில் நடிப்பு தான்.

முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த் தற்போது அதிகமாக ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். சீரியலில் அவரது எதார்த்த நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகின்ற நிலையில் ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார்.

அதாவது, வெற்றி வசந்த் திருமணம் பற்றிய அறிவிப்பு தெரிவித்து இருக்கிறார். விஜய் டிவி பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவியை தான் வெற்றி வசந்த் திருமணம் செய்கிறார்.

அவர்களுக்கு இந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. அதை வீடியோ வெளியிட்டு வெற்றி வசந்த் தெரிவித்து வருகிறார். அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story