விஜய்யின் 'கோட்' பட நடிகைக்கு பிறந்தநாள் - அப்டேட்டுடன் வாழ்த்து !!!

விஜய்யின் கோட் பட நடிகைக்கு பிறந்தநாள் - அப்டேட்டுடன் வாழ்த்து !!!

மீனாட்சி சவுத்ரி

தளபதி விஜய் களமிரங்கும் கோட் திரைப்படத்தின் சுவாரசியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

AGS நிறுவனம் தயாரிப்பில் விஜய் தனது 68வது படத்தில் இப்போது நடித்து வருகிறார். தற்போது விஜய்யின் 68வது படத்தை இயக்கவும் வெங்கட் பிரபுவிற்கு வாய்ப்பு கிடைக்க பட வேலைகள் நடந்து வருகிறது.

கோட் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இந்த அப்டேட்டை தாண்டி வேறு எந்த விஷயமும் வெளியாகவில்லை. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஜே பேபி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட வெங்கட் பிரபுவிடம் கோட் படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு அவர், இந்த மாதத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைவடையும். அதன்பிறகு ஒரு வெளிநாட்டு ஷெட்யூல் மட்டும் உள்ளது, அதோடு படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும். படத்தில் சிஜி பணிகள் உள்ளன, லாஸ் ஏஞ்சல்ஸில் அதன் வேலைகள் நடைபெற்று வருகின்றன, அவை எல்லாம் நிறைவடைந்தால் தான் படத்தின் அப்டேட்டோ, பட வெளியீட்டையே திட்டமிட முடியும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள், சரியான நேரத்தில் அப்டேட் வரும் என கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

மேலும் விஜய்யின் 'கோட்' பட நடிகை நடிகை மீனாட்சி சவுத்ரி இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் கோட் படகுழு அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனஅறிவித்துள்ளனர்.

Tags

Next Story