விஜய் சேதுபதி - 51 படத்தின் சுவாரசியமான அப்டேட் ..

விஜய் சேதுபதி - 51 படத்தின் சுவாரசியமான அப்டேட் ..

விஜய் சேதுபதி

முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரம்மாண்ட சண்டைக்காட்சி, சேசிங் காட்சியில் இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. 7 C-ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கி உள்ளார். இந்த படம், விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் எடுக்கப்பட்டது. படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது என தெரிவித்துள்ளனர். இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இந்த படத்தை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தப்படாத பல முக்கியமான இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என தெரிவித்தனர். சைனீஸ் சண்டை கலைஞர்களுடன், விஜய் சேதுபதி கலந்துகொண்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சி இப்படத்தில் படமாக்கப்பட்டது. மலேசியாவின் மிகப்பிரபலமான பத்துமலை முருகன் கோவிலில், இறுதிக்காட்சியை படமாக்கி, படக்குழு படப்பிடிப்பை முடிவு பெற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story