நடிகை ரம்யா கிருஷ்ணன் கணவரை விவாகரத்து செய்கிறாரா - இதற்கு பதில் அளித்த கணவர் !!
நடிகை ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் வம்சியை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.
ரம்யா கிருஷ்ணன் 40 ஆண்டுகாலமாக சினிமாவில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார். அனைத்து விதமான ரோல்களிலும் நடித்து விட்டார்.
ரம்யா கிருஷ்ணனனுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் பாகுபலியில் நடித்த ராஜமாதா ரோலில் நடித்த நிலையில் இவரை ராஜமாதா எனவே அழைக்கின்றனர்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் 2003 -ஆம் ஆண்டு வம்சியை காதலித்து கரம் பிடித்தார். இவர்களுக்கு 19 வயதுள்ள ஒரு மகன் உள்ளார்.
சமீபத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் கணவர் வம்சியை விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது.
மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்து சென்னை, ஐதராபாத் என தனி தனியாக வாழ்வதாக செய்திகள் வெளியாகி பேசும் பொருளானது. இந்நிலையில் இதுக் குறித்து முதன் முறையாக கிருஷ்ண வம்சி மனம் திறந்துள்ளார்.
இதுக் குறித்து கிருஷ்ண வம்சி பேட்டியில் கூறியதாவது, "நான் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதை வைத்து வதந்திகள் பரப்பி உள்ளனர். இதில் உண்மை இல்லை எனவும்
இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம். ரம்யா கிருஷ்ணன் மனிதர்களை நேசிப்பவர்" என்று சொல்லி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.