ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு - இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவு !!
ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜோடி ஜெயம்ரவி ஆர்த்தி. தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக விவாகரத்து பெற உள்ளதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வந்தது.
சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்த ஜெயம்ரவி, அதற்காக சென்னை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரில் ஆஜரானார்.
ஆர்த்தி காணொலியில் ஆஜராகி இருந்தார். வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், இருவரும் இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Next Story