ஹாலிவுட் படத்தில் நடிக்கும் கமல் மகள் - ஸ்ருதி ஹாசன்!

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் கமல் மகள் - ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். இவர் தனது 14 வயதில் தனது தந்தை கமல்ஹாசன் இயக்கத்தில் 2000-ல் வெளிவந்த "ஹேராம்" என்ற படத்தில் வல்லபபாய் படேல் மகள் வேடத்தில் நடித்தார்.

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று 30 பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 2009 -ல் ஸ்ருதி பாடிய "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் குறிப்பிடத்தக்கது. இவரது குரல் தனித்தன்மை வாய்ந்தது.பல விருதுகள் பெற்றுள்ளார்.

நடிப்பு திறமையை வெளிப்படுத்தினாலும் 'ஸ்ருதி" என்ற பெயருக்கு ஏற்ப நடிப்பை விட இசை மீது அதிக ஆர்வம் உண்டு.இவரது இசை திறனை இளையராஜா கண்டறிந்து 6 வயதில் 'தேவர் மகன்' படத்தில் "போற்றி பாடடி பெண்னே" என்ற பாடலை பாட வைத்தார்.

தெலுங்கு படங்களில் உள்ள அனைத்து முன்னனி ஹீரோக்களுடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் சர்வதேச படம், 'சென்னை ஸ்டோரி'. இதில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார்.டிமேரி என் முராரியின் 'அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற ரொமான்டிக் காமெடி நாவலின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது.

இதில் நடிக்க இருந்த சமந்தா தசை அழற்சி காரணமாக விலகி உள்ளார் என்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து சமந்தாவுக்கு பதிலாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அனு என்ற பெயரில் 'டிடெக்டிவ்' வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பில் ஸ்ருதி தற்போது இணைந்துள்ளார். மேலும் ஹாலிவுட் படத்தில் நடிப்பது தனது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது என ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story