விரைவில் வெளியாகும் `கொட்டுக்காளி'

விரைவில் வெளியாகும் `கொட்டுக்காளி

கொட்டுக்காளி

இயக்குனர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுகம் ஆனார்.

சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் மாபெரும் வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் தாயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. இந்த படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில் தற்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரங்களை குவித்து வருகிறது.

அந்த வகையில் 53 வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதை கொட்டுக்காளி திரைப்படம் வென்று அசத்தியுள்ளது.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரையிடையப்பட்டது. 20ஆவது FEST Festival விழாவில் சிறந்த படத்திற்கான 'GOLDEN LYNX' விருதை 'கொட்டுக்காளி' திரைப்படம் வென்றுள்ளது.

பல சர்வதேச விருதுகளையும் அங்கீகாரமும் இப்படத்தின் மீது மக்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பல சர்வதேச ஊர்களுக்கு சென்று பாராட்டைப் பெற்ற கொட்டுக்காளி கடைசியாக தன் சொந்த மண்ணிற்கு வரப்போகிறது.

திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story