லியோ 2 உருவாவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது - லோகேஷ் கனகராஜ்

லியோ 2  உருவாவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது - லோகேஷ் கனகராஜ்

புத்தகம் வெளியீடு 

லியோ 2 திரைப்படம் உருவாவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும். விஜய்யின் லட்சியம் வேறு எங்கோ இருக்கிறது, அதற்கு முதலில் மிகப் பெரிய வாழ்த்துகள். லியோ 2 திரைப்படம் எடுப்பதற்கு எல்லா சாத்தியங்களும் இருக்கிறது என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

சென்னை: ஸ்ரீ வைகுண்டம் எம்எல்ஏ அமிர்தராஜ் எழுதியுள்ள கிராபிக்ஸ் காமிக் நாவலான ’என்ட் வார்ஸின்’ தமிழ்ப் பதிப்பான இறுதிப்போர் புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நாவலின் தமிழ்ப் பதிப்புக்குப் பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி வசனங்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு முதல் பதிப்பைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், ”எனக்கு காமிக் புத்தகங்கள் என்றால் சிறு வயதில் இருந்தே விருப்பம். ஆங்கிலத்தில் இதுபோன்ற கிராபிக்ஸ் நாவல்கள் புதியதல்ல. ஆனால் தமிழில் அதனைத் தரமானதாகக் கொடுத்துள்ளனர். இது தொடர வேண்டும், எனக்குத் தெரிந்து அப்போது வந்த ஒரே கிராபிக்ஸ் நாவல் இரும்புக் கை மாயாவி. இந்த புத்தகமும் அந்த அளவுக்குத் தரமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, "தமிழில் ஒரு கிராபிக்ஸ் நாவல் வந்துள்ளது.

இதற்கு இரும்புக் கை மாயாவி கதைகள் உந்துதலாக இருந்தது. நம்ம ஊருக்கான ஒரு சூப்பர் ஹீரோ ஏன் எழுதக்கூடாது என்று எழுதியது. ஆனால் அதன் பொருட்செலவு அதிகமாக இருந்தது. எனது முதல் பட அனுபவத்தை வைத்து அது பண்ணக்கூடாது என்பதால் அதனை நானே தள்ளிவைத்து விட்டேன். இன்னும் ஒரு நான்கு படம் பண்ணிவிட்டு பொறுமையாக அந்த படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. லியோ 2 திரைப்படம் உருவாவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும். விஜய்யின் லட்சியம் வேறு எங்கோ இருக்கிறது அதற்கு முதலில் மிகப் பெரிய வாழ்த்துகள். லியோ 2க்கு திரைப்படம் எடுப்பதற்கு எல்லா சாத்தியங்களும் இருக்கிறது. அவர் எப்போது சொன்னாலும் போய் பண்ணலாம். ரஜினியின் 171வது திரைப்படம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், இன்னும் மூன்று மாதங்கள் கழித்துத்தான் படப்பிடிப்பு தொடங்கும், இன்னும் கொஞ்சம் எழுத வேண்டியுள்ளது" என தெரிவித்தார்.

Tags

Next Story