இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி !!

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி !!
X

தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களின் விவாகரத்து வரிசையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் இடம் பெற்றிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் சாய்ரா பானு இடையே - இதுவரை எந்த சண்டையும், வாக்குவாதமும் ஏற்பட்டதாக தெரியாத நிலையில், திடீரென சாய்ரா பானுவின் இந்த பிரிவு அறிவிப்பு நேற்று இந்திய சினிமாவிலேயே பரபரப்பை ஏற்படுத்தியது.

1995ல் தான் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா திருமணம் நடைபெற்றது. காதல் பாடல்களுக்கு பெயர் பெற்ற ஏ.ஆர்.ரகுமான் காதலித்து திருமணம் செய்யவில்லை, 'எனக்கு ஒரு பொண்ணு பாருங்க' என அவரது அம்மாவிடம் கூறி இருக்கிறார். அவர் பார்த்து ஏற்பாடு செய்தது தான் இந்த திருமணம்.

இவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிந்துள்ளது. இந்த நிலையில், தன்னை பிரிவதாக சாய்ரா பானு அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தள பக்கத்தில், 30ம் ஆண்டு திருமண பந்தத்தை எட்டுவோம் என நம்பி இருந்ததாகவும், ஆனால், அனைத்தும் எதிர்பாராத முடிவுகளாகி விட்டது என்று பதிவில் தெரவித்துள்ளார்.

Tags

Next Story