பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் பாதிப்பு அடைந்துள்ளோம் - தனுஷ் மீது நயன்தாரா குற்றசாட்டு !!

பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் பாதிப்பு அடைந்துள்ளோம் - தனுஷ் மீது  நயன்தாரா குற்றசாட்டு !!

தனுஷ் மீது நயன்தாரா குற்றசாட்டு

நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. இதற்கான ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது. ஆவணப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதற்கு என்ன காரணம் என்பது குறித்தும், அதற்கு தனுஷ் தடையாக இருந்ததாகவும் நடிகை நயன்தாரா குற்றம்சாட்டி உள்ளார். மூன்று பக்கங்கள் இந்த இந்த அறிக்கையில், தனுஷ் குறித்தும், ஏன் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் ஏன் தாமதமானது என்பது குறித்தும் கூறியுள்ளார்.

இதில் துவக்கத்தில் தனுஷ் தனது தந்தை மற்றும் அண்ணனின் துணையுடன் சினிமாவிற்கு வந்தவர் என்றும், தான் தனி ஒரு பெண்ணாக எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார் நயன்தாரா.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் Nayanthara : Beyond the Fairy tale’ ஆவணப்படத்தை என்னை போலவே எனது ரசிகர்களும், எனது நலன் விரும்பிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யவே அனைத்து தடைகளையும் மீறி இந்த ஆவணப்படத்தை வெளியிட தயாராகி இருக்கிறோம்.

உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த ‘நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது. இந்த ஆவணப்படத்தில் நானும் ரௌடி தான் படத்தின் காட்சிகளையும், புகைப்படங்களையும், பாடல்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் தடையில்லா சான்றிதழ் பெற உங்களிடம் நடந்த எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்தது.

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்" நீங்கள் தயாரிப்பாளர் தானே தவிர, அரசன் அல்ல. சட்டப்பூர்வமான உங்கள் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாகவே எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story