விஜய் களமிறங்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்த அப்டேட் !!

விஜய் களமிறங்கிய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்த அப்டேட் !!

கோட்

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்).

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அப்பா மற்றும் மகன் என இரண்டு கேரக்டரில் நடித்துள்ளார்.

படத்தில் இடம்பெற்ற 2 பாடல்கள் வெளியாகிவிட்டது, 3வது பாடல் நாளை (ஆகஸ்ட் 3) ரிலீஸ் என அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

நாளை வெளியாக இருக்கும் விஜய்யின் கோட் படத்தின் 3வது பாடல் புரொமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story