தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது மிகவும் ஆபத்து - நடிகர் சத்யராஜ் கருத்து !!
நடிகர் சத்யராஜ்
சென்னையில் நேற்று (நவ.8) ‘திராவிடமே தமிழுக்கு அரண்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவரின் கருத்து, திராவிடத்தின் ஆரியத்தை எதிர்க்கலாம். ஆனால், தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிடத்தை எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவது மிகவும் ஆபத்து. ஆரியத்துக்கு துணை நின்றால் மீண்டும் சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் என மூடநம்பிக்கைகள் அதிகரிக்கும். தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள இக்காலத்தில் நமக்கு இருமொழிக் கொள்கை தான் அவசியம்.
தமிழ்நாட்டுக்கு வடமாநிலத்தை சேர்ந்த நிறைய பேர் வேலை பார்க்க வருகின்றனர். அவர்களுக்கும் திராவிடத்தை நாம் அவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்குப் புரிந்த மொழியில் அதனை விளக்க வேண்டும். வட மாநிலங்களில் சாதியப் பிரச்சினைகள் அதிகம். இங்கே வேலைக்கு வரும் பெரும்பாலான வட மாநிலத்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இங்கே வேலை பார்க்க வருகின்றனர் என்றால், இங்கு சாதிய ஒடுக்குமுறை இல்லை, மதக் கலவரங்கள் இல்லை. நிம்மதியாக வாழலாம் என்று வருகின்றனர். இதற்கு திராவிடம் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்குச் சென்று தமிழ்நாட்டைப் பற்றி அங்கு பேசுவார்கள். இங்கே வட மாநிலத்தவர் சிறுசிறு வேலை நிமித்தமாக அதிகமாக வருகிறார்கள் என்றால், அதற்கு இங்குள்ளவர்கள் வேலை செய்யத் தயாராக இல்லை என்று அர்த்தமில்லை, சிறிய வேலைகளைத் தாண்டி பெரிய இடத்தில் வேலை செய்யும் சூழலில் இங்குள்ளவர்கள் உயர்ந்து இருக்கிறார்கள் என்றே அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் தேசியம் என்கின்ற பெயரில் திராவிடத்தை எதிர்ப்பது அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் ஆரியத்திற்கு துணை போவது என்பது. அதுவே எங்களின் கருத்து. அப்படி போகும்போது சாஸ்திரம் சம்பிரதாயம் சடங்கு என்ற போர்வையில் சகலவிதமான மூடநம்பிக்கைகளும் வளரும், சாதிய ஒடுக்குமுறை, பெண் அடிமைத்தனம், மதம், சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் அடக்குமுறைகள் எல்லாம் அதிகரிக்கும்.
தம்பி அஜித்குமார் ஒரு பதிவை சமீபத்தில் சுற்றுலா செல்லும் போது பதிவிட்டார். அதில், ‘சம்பந்தமில்லாமல் ஒரு மனிதனைப் பார்த்து கோபம் வருவதற்கு காரணம் மதம்தான். எங்கேயோ ஒரு நாட்டிற்கு செல்கிறோம் ஒருவரை பார்க்கிறோம். அவருக்கும் நமக்கும் எந்த ஒரு தகராறும் இல்லை. ஆனால், அவர் இந்த மதம் என்று அறியப்பட்டால் தேவையில்லாமல் அவர் மீது ஒரு வெறுப்பு வரும்’ என்றிருந்தார். இந்த ஒரு அழகான பதிவை பதிவிட்டு இருக்கிறார். அதற்கு அஜித்குமார் தம்பிக்கு எனது பாரட்டுக்கள் என தெரிவித்திருந்தார்.