சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ ....

சிறகடிக்க ஆசை சீரியலின் ப்ரோமோ ....

சிறகடிக்க ஆசை சீரியல் 

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் மக்களிடம் நல்ல ரீச் கிடைத்துள்ளது.

முத்து மீனா மிகவும் பிரபலமாகி விட்டார்கள். அவர்களுக்கு ஜோடியாகவும் பல தனி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அண்மையில் கூட வெற்றி வசந்த் மற்றும் கோமதி ஒரு உணவகத்திற்கு ரசிகர்களுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அந்த வீடியோக்கள் கூட வெளியாகி இருந்தது. தற்போது கதையில் முத்து சொன்ன வார்த்தையால் மனம் உடைந்து போன மீனா வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். முத்து எல்லா இடத்திலும் தேடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் மனோஜ், மீனா ஏதாவது கடிதம் எழுதிவிட்டு சென்றாரா? பார்த்தீர்களா.. அதில் மாமியார் கொடுமை என ஏதாவது எழுதி வைத்துவிட்டு தவறாக எதாவது செய்து கொள்ளப் போகிறார் என கூறுகிறார். இதனால் விஜயா இப்படியெல்லாம் பயமுறுத்துகிறார் என ஷாக் ஆகிறார்.

Tags

Next Story