புஷ்பா 2 தி ரூல் - இரண்டாவது பாடல் இன்று வெளியீடு

புஷ்பா 2 தி ரூல் - இரண்டாவது பாடல் இன்று வெளியீடு

புஷ்பா 2 தி ரூல் 

புஷ்பா 2 தி ரூல் படத்தின் இரண்டாவது பாடல் இன்று காலை 11:07 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா 2 தி ரூல் என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது. இந்நிலையில்,இன்று இரண்டாவது பாடல் காலை 11:07 மணி அளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags

Next Story