ரஜினி களமிறங்கிய படையப்பா திரைப்படம் விரைவில் ரீ-ரீலிஸ் !!

ரஜினி களமிறங்கிய படையப்பா திரைப்படம் விரைவில் ரீ-ரீலிஸ் !!

படையப்பா 

வெற்றி பெற்ற திரைப்படங்களை ரிலிஸ் செய்யும் ட்ரெண்டில் கில்லி, பில்லா உள்ளிட்ட பல படங்கள் ரீ ரிலீஸ் ஆனது கில்லி திரைப்படம் மறு வெளியீட்டிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் 10 ஏப்ரல் 1999 அன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினியுடன் ,சிவாஜி கணேசன் ,லட்சுமி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் ,சித்ரா மற்றும் முன்னணி நடிகர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படமாக திரையரங்குகளை அதிர வைத்தது. படத்தின் முதல் பாதியில் துறுதுறுவென இருப்பார் ரஜினி இளைஞர்களுக்கு பிடித்தது போல இருக்க வேண்டும் என்பதால் முதல் பாதியில் உடல் ஸ்டைல் எல்லாம் அதற்கு ஏற்றார் போல இருக்கும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் பஞ்சுகளை எழுதும் பொறுப்பையும் அவரை எடுத்துக் கொண்டார்.

"போடா ஆண்டவனே நம்ம பக்கம் தான் இருக்கான்" "அதிகமாக ஆசைப்படுற ஆம்பளையும் அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை" என்கிற வாசகங்களை ரஜினி எழுதி இருந்தார். இதில் அசத்தலான ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமான நடிப்பும் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றது. அனைத்து பாடல்களும் ரசிகர்களின் நெஞ்சில் இன்றைக்கு வரை நீங்கா இடம் பிடித்துள்ளது.

இந்நிலையில் படையப்பா திரைப்படத்தை ரீ-ரீலிஸ் செய்ய அப்படத்தின் தயாரிப்பாளரான தேனப்பன் முடிவு செய்துள்ளார். இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படையப்பா படம் ரீ ரிலீஸ் ஆகும் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் கில்லி படம் போலவே அதிக வசூலை பெறும் என திரை வட்டாரங்கள் இடையே பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story