ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை !!

ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை !!

அமரன் படம் 

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கையைப் மையமாக எடுத்த படம் தான் 'அமரன்'. யார் இந்த மேஜர் முகுந்த்? இவரது சாதனைகள் என்ன? அவரது மறைவுக்கு காரணம் யார் ? இந்தியாவே கலங்கியது ஏன்? விரிவாக பார்க்கலாம்.

மேஜர் முகுந்த் வரதராஜன் பிறப்பு :

மேஜர் முகுந்த் வரதராஜன், சென்னையை அடுத்த தாம்பரம் நகரில் 1983ம் ஆண்டு ஏப்ரல் 12, அன்று ஒரு தமிழ் குடும்பத்தில் ஆர்.வரதராஜன் மற்றும் கீதாவுக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாத்தா இராகவாச்சாரி மற்றும் இவரது இரண்டு மாமாக்களும் இராணுவத்தில் பணியாற்றினர். இது முகுந்த் வரதராஜனைப் இராணுவத்தில் சேரத் தூண்டியது.

முகுந்த் வரதராஜனுக்கு ஸ்வேதா, நித்யா என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். முகுந்த் தனது நீண்டகால காதலியான கேரளாவை சேர்ந்த இந்தூ ரெபேக்கா வர்கீஸை, ஆகஸ்ட் 28, 2009 அன்று திருமணம் செய்தார். இவர்களுக்கு அஸ்ரேயா என்ற ஒரு மகள் மார்ச் 17, 2011 இல் பிறந்தார். முகுந்த் தனது, இளங்கலை வணிகவியல் பட்டத்தை காஞ்சிபுரம், ஏனத்தூரில் உள்ள ஸ்ரீ சந்திரசேகரேந்தரா சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் பெற்றார். மேலும், தாம்பரத்திலுள்ள, சென்னை கிரிஸ்துவக் கல்லூரியில், இதழியலில் ஒரு பட்டயப் படிப்பு முடித்தார். 2011 இல் ஐ.நா.சபை சார்பில் லெபனானுக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையிலும் இடம்பெற்றிருந்தார். 2012- ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை உச்சத்தில் இருந்த போது, மேஜராக பதவி உயர்வு பெற்று அங்கு பணியமர்த்தப்பட்டார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் மரணம் :

காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகள் ஆக்கிரமித்திருந்த 2013- ஆம் ஆண்டு வாக்கில் யாச்சு குகன் பகுதியில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பை சேர்ந்த அல்தாப் பாபா என்கிற பயங்கரவாதி பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்து. அவர்களை ஒழித்து கட்டும் பணியை மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமையிலான 44 ராஷ்ட்ரிய ரைஃபிள் படையணியிடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம். அப்போது மிகவும் திறன் பட செயல்பட்டு அல்தாப் பாபாவை சுட்டுகொன்றார் முகுந்த். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து முக்கிய கடிதத்தையும் கைப்பற்றினார் முகுந்த்.

கோட் வேர்டுகள் நிரம்பிய அந்த கடிதத்தை இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப குழு 3 மாதங்கள் போராடி உடைத்தது. காஷ்மீரின் ஷோப்பியான் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் அல்தாப் வாணி பதுங்கியிருப்பதாக கூறியது அக்கடிதம்.

அல்தாப் வாணியை சுட்டுக்கொல்ல திட்டமிட்ட முகுந்த் வரதராஜன், தனது சகாக்களுடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தார். முதல் பயங்கரவாதியை கையெறி குண்டு வீசி கொன்றார் முகுந்த். எனினும் முகுந்தின் இலக்கான வாணி தப்பி விடுகிறார். அவரையும் கண்டு பிடித்து சுட்டு வீழ்த்திய முகுந்தை சக வீரர்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

ஆனால் சில நொடிகளிலேயே சரிந்து விழுந்துவிட்டார் முகுந்த். அல்தாப் வாணியுடனான நேருக்கு நேர் சண்டையில் முகுந்தின் உடலை 3 குண்டுகள் துளைத்திருந்தன. முகுந்த்தின் உடலில் மூன்று இடங்களில் குண்டுகள் பாய்ந்துள்ளன. அவற்றைத் தாங்கிக் கொண்டு தான் எதிரிகளுடன் சண்டையிட்டு வெற்றி கண்டார் மேஜர் முகுந்த். எதிரிகளை வேட்டையாடிய முகுந்த் வெற்றிக் குறியோடு மண்ணில் விழுந்ததும் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் சக வீரர்கள். ஆனால் வழியிலேயே மேஜர் முகுந்த் வீர மரணம் அடைந்தார் முகுந்த். இந்தியாவால் தேடப்பட்டு வந்த 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய முகுந்த் வரதராஜனுக்கு மிக உயரிய விருதான அசோக சக்ரா விருதை வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.

முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தபோது ஒட்டு மொத்த இந்தியாவும் கண்ணீர் கடலில் மூழ்கியது. அப்போது அவரது மனைவி ரெபேக்காவுக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், தாய் நாட்டிற்காக மிகப்பெரிய சேவை செய்யும் போது தனது இன்னுயிரை தியாகம் செய்தது போற்றுதலுக்கு உரியது என குறிப்பிட்டிருந்தார்.


Tags

Next Story