ரஜினிகாந்துடன் தகராறு என வதந்தை ...? முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் !!

ரஜினிகாந்துடன் தகராறு என வதந்தை ...? முற்றுப்புள்ளி வைத்த சத்யராஜ் !!

ரஜினிகாந்த் சத்யராஜ்

ரஜினிகாந்த், சத்யராஜ் இணைந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில் இவர்கள் கூட்டணியில் வந்த மிஸ்டர் பாரத் என்ற திரைப்படம் பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பதை நிறுத்தி விட்டனர்.

சிவாஜி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ் நடிக்க மறுத்து உள்ளார். ரஜினிக்கும் சத்யராஜுக்கும் தகராறு என்றும் இதனால் சத்யராஜ் நடிக்க மறுக்கிறார் என்றும் தகவல் பரவின.

இந்த நிலையில் தற்போது நிருபர்களை சந்தித்த சத்யராஜிடம் ரஜினியுடன் உங்களுக்கு தகராறா என்று எழும்பிய கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறும் போது ரஜினிகாந்த் உடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எங்களுக்குள் தகராறு என்று புரளி கிளப்பியவர்கள் யார் என்று தெரியவில்லை.

ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மிஸ்டர் பாரத் படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரமும் அமைந்தது.

அந்த படத்துக்கு பிறகு ரஜினியுடன் நடிப்பதாக இருந்தால் அதையும் தாண்டி வலுவான கதாபாத்திரமாக இருக்க வேண்டும் என்பதனால் நான் நடிக்க மறுத்தேன் என்று எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார்.

தற்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் ரஜினியும் சத்யராஜும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story