அக்டோபர் 20ம் தேதி சரிகமப சீசன் 4 Grand Finale !!

அக்டோபர் 20ம் தேதி சரிகமப சீசன் 4 Grand Finale !!

சரிகமப சீசன் 4 Grand Finale

ஜீ தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாடல் நிகழ்ச்சிகளில் ஒன்று சரிகமப.

சரிகமப இதுவரை வெற்றிகரமாக 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி 4வது சீசன் ஒளிப்பரப்பானது.

சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணி அளவில் ஒளிபரப்பாகும் இந்த சரிகமப சீசன் 4. பெரியவர்கள், சிறியவர்கள் என 2 சீசன்களை சேர்த்து இந்த 4வது சீசன் மூலம் 8 முறையாக சரிகமப சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.

ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் கார்த்திக் ஏற்கெனவே நிறைய சீசன்களின் நடுவர்களாக இருந்துவரும் நிலையில் இந்த பெரியவர்களுக்கான 4வது சீசன் மூலம் புதிய நடுவராக பாடகி சைந்தவி களமிறங்கினார்.

4வது சீசன் வெற்றிகரமாக நடந்துவரும் நிலையில் இறுதிக்கட்டத்திற்கு நெருங்கி உள்ளது. வரும் அக்டோபர் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் சரிகமப சீசன் 4 Grand Finale நடக்க இருக்கிறது.

சரிகமப சீசன் 4 Grand Finale பிரம்மாண்ட நிகழ்ச்சியின் நடுவராக பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story