ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம் !!

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள  வேட்டையன் திரைப்படத்தின் திரை விமர்சனம் !!

வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன். ரஜினியின் 170வது படமான இதை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கி உள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து உள்ளது.இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்து உள்ளார். அவரது இசையில் ஏற்கனவே மனசிலாயோ, ஹண்டர் வண்டார் போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா டகுபதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தின் கதையை முதலில் சூர்யாவுக்கு தான் சொல்லி இருந்தாராம் இயக்குனர் ஞானவேல், ஆனால் இது ரஜினிகாந்துக்கு பொருத்தமாக இருக்கும் என சூர்யா சொன்னதை அடுத்து தான் சூப்பர்ஸ்டாரை வைத்து வேட்டையன் படத்தை எடுத்திருக்கிறார் ஞானவேல்.

வேட்டையன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி உள்ளது. தமிழ்நாட்டில் இப்படத்தில் முதல் காட்சி 9 மணிக்கு தான் திரையிடப்படும், ஆனால் அதற்கு முன்னரே ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடப்பட்டு உள்ளது. அங்கு படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்கள் எக்ஸ் தளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரின் மாஸ் மொமண்ட்ஸையும் கொண்டாடும்படி உள்ளது. அரை மணி நேரத்துக்கு பின்னர் கொலை குற்றத்தின் விசாரணை பற்றி விறுவிறுப்பாக நகர்கிறது திரைக்கதை. அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமை. எமோஷனல் காட்சிகள் நன்கு கனெக்ட் ஆகி உள்ளது. துஷாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பகத் பாசில் ரோல் நகைச்சுவையாக உள்ளது. மொத்தத்தில் வேட்டையன் மாஸ் பிளஸ் கிளாஸ் நிறைந்த மெசேஜ் உள்ள படம். முதல் பாதி சூப்பர், இரண்டாம் பாதி ஒரு அளவு நல்ல இருக்கு என பதிவிட்டு உள்ளார். வேட்டையன் கண்டெண்ட் உள்ள கமர்ஷியல் படமாக உள்ளது. சில சீன்களை என்ஜாய் பண்ணிவது மட்டுமின்றி கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது.

Tags

Next Story