சதீஷ் களம் இறங்கிய சட்டம் என் கையில் திரைப்படத்தின் திரைவிமர்சனம் !!

சதீஷ் களம் இறங்கிய சட்டம் என் கையில் திரைப்படத்தின் திரைவிமர்சனம் !!

சட்டம் என் கையில்

சதீஷ் களம் இறங்கிய கிரைம் திரில்லர் படமான சட்டம் என் கையில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த கிரைம் திரில்லர் படத்தில் கதை கருவாக கதையின் ஆரம்பத்திலேயே சதீஷ் பதற்றத்தோடு இருந்த நிலையில் ஏற்காடு மலையில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட அந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழந்து விடுகிறார்.

அந்தப் பதற்றத்தில் இருக்கும் சதீஷ் இறந்தவர் உடலை காரின் பின்புறத்தில் உள்ள டிக்கியில் போட்டுக் கொண்டு தன் பயணத்தை தொடர ஆரம்பிக்கிறார். இந்நிலையில் செக் போஸ்டில் நிறுத்தாமல் சதீஷ் வேகமாக காரை இயக்கிய நிலையில் போலீசார் சந்தேகித்து இரண்டாவது செக் போஸ்டில் மோசமான அதிகாரியான பாட்ஷாவிடம் (பாவேல் நவகீதன்) மாட்டிக்கொள்கிறார். பாட்ஷா வை கௌதம் தாக்க, காருடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அதே நேரத்தில் ஏற்காட்டில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார் .அந்த வழக்கை அதே காவல்நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஐ விநாயகம் (அஜய் ராஜ்) விசாரிக்கிறார். அந்த கேசை சதீஷ் மேல் போடுவதற்கு போலீஸ் முயற்சி செய்கிறது காவல் நிலையத்தில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆபத்திலிருந்து தப்பிக்க முயலும் இடங்களில் பதற்றத்தினைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். இதிலிருந்து அவர் தப்பிப்பாரா? இளம் பெண்ணை கொலை செய்தது யார் ? காரில் உள்ள சடலம் என்ன ஆனது? போன்ற பல கேள்விகளுக்கு திகிலுடன் விடையளிக்கிறது இந்த க்ரைம் படம்.

தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலிருந்து விலகி, தீவிரமான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது. இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விட்டு கவனம் பெறாமல் பயணித்துக் கொண்டிருந்த அஜய்ராஜ், இந்த படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ஒரு இரவில் நடக்கும் கதையின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், அதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் பணி படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஏற்காட்டின் இரவு தன்மையைக் கச்சிதமாகத் திரையில் ஏற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் மார்ட்டின் டைட்டஸ். அருண் ஏகே, ராஜா நல்லையா கூட்டணி ஒலி வடிவமைப்பில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

இயக்குநர் சாச்சியின் சாமர்த்தியமான கதை சொல்லல் மற்றும் படத்தில் இருக்கும் சில தடுமாற்றங்களை ரசிகர்களின் பார்வையில் இருந்து மறைத்து, ஒரு அட்டகாசமான கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது.

Tags

Next Story