பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் மரணம் !!

பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நல குறைவால் மரணம் !!

பாடகர் ஜெயச்சந்திரன் 

பாடகர் ஜெயச்சந்திரன் (வயது 80) தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்.

இவர் 80 மற்றும் 90களில் தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி, ரசிகர்களை ஈர்த்தவர். இவரது பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன், கேரள மாநிலம் திருசூரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் ஜெயச்சந்திரன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

இவருடைய மரணம் திரைப் பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story