அடுத்த படப்பிடிப்பில் பிஸியான சிவகார்த்திகேயன் - படப்பிடிப்பு காட்சி வீடியோ வைரல் !!

அடுத்த படப்பிடிப்பில் பிஸியான சிவகார்த்திகேயன் - படப்பிடிப்பு காட்சி வீடியோ வைரல் !!
X

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து வசூல் நாயகனாக வலம் வருகிறார்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாரான இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

உண்மை கதையை மையமாக வைத்து வெளியான இப்படத்தை ரசிகர்கள் நல்ல முறையில் கொண்டாடி படத்தையும் ஹிட் படம் லிஸ்டில் சேர்த்துள்ளனர்.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஹவுஸ் புல்லாக படம் ஒளிபரப்பாகி வருவதால் ஓடிடி ரிலீஸ் 8 வாரங்கள் கழித்தே வெளியாகும்.

அமரன் படத்தை ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வர சிவகார்த்திகேயன் தனது பட வேலைகளில் பிஸியாகிவிட்டார்.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் தனது புதிய படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெருங்களத்தூரில் உள்ள பாலத்தின் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும் படப்பிடிப்பு காட்சி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

Tags

Next Story