திருப்பூரில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடல்

திருப்பூரில் அயலான் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

திருப்பூரில் அயலான் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர் - கடின உழைப்புக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் அழைத்து இருப்பதாக பேட்டி. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ரவிக்குமார் தயாரிப்பில் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான அயலான் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி திரையரங்கில் ஓடி வருகிறது. இந்நிலையில் அயலான் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தினர்.

முன்னதாக சிவகார்த்திகேயனை வரவேற்கும் வகையில் ரசிகர் மன்றத்தினர் பட்டாசுகள் வெடித்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் வெவ்வேறு பகுதிகளில் பிறந்த ரவிக்குமாரும் நானும் இணைந்து தமிழக மக்களுக்காக புதுவிதமான படத்தை கொடுத்திருப்பதாகவும் அதனை மக்கள் வரவேற்க துவங்கி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். வெற்றி விழாவிற்கான முன்னோட்டமாக இந்த கூட்டத்தை பார்ப்பதாகவும் கடந்த முறை திருப்பூர் வந்தபோது படத்தை வெளியிட்ட பிறகு தான் மீண்டும் திருப்பூர் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்ட நிலையில் தற்போது அதேபோல் திருப்பூர் வந்திருப்பதாகவும் இந்த கைதட்டல்கள் மற்றும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குனர் ரவிக்குமாரை உற்சாகப்படுத்திய அவரது தாயாருக்கு சேரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் ரசிகர்கள் அயலான் 2 திரைப்படம் குறித்து கூச்சல் எழுப்பியதற்கு நிச்சயமாக இதில் உள்ள விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதனை சரி செய்து சிறப்பான முறையில் அயலான் 2 படம் எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்துக் கொண்ட சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தபோது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றியை பார்ப்பதாகவும் அனைத்து வயதினரும் குடும்பமாக வந்து படத்தை பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story