தெலுங்கு திரையுலகில் கின்னஸ் உலக சாதனை படைத்த சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவி !!!
சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் நடிகர் சிரஞ்சீவி தற்போது இந்திய திரை உலகத்தில் மிகச்சிறந்த நட்சத்திரமாக கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். சிரஞ்சீவி இதுவரை 24,000 நடன ஸ்டேப்புகளை 537 பாடல்களில் 156 படங்களில் 45 வருடங்களுக்குள் செய்ததால் இந்த விருதை அவருக்கு வழங்கியுள்ளனர். இந்த விருதை நடிகர் அமீர்கான் வழங்கி சிரஞ்சீவியை கௌரவித்தார். நேற்று இந்த விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதை செப்டம்பர் 22ஆம் தேதி 1978 வது வருடத்தில் இவர் நடித்த முதல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்று சிரஞ்சீவி கூறியது, என்னுடைய சினிமா பயணத்தில் நான் கின்னஸ் சாதனை படைப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது தற்செயலாக அமைந்தது ஒன்று, என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு இயக்குனர்களுக்கு மற்றும் என் அன்பார்ந்த ரசிகர்களுக்கு இந்த நேரத்தில் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு நடிப்பதை விட நடனத்தில் ஆர்வம் அதிகம் அதனால் எனக்கு இந்த விருது கிடைத்திருக்கலாம் என கூறி இருந்தார். சிரஞ்சீவி தற்பொழுது மல்லிடி இயக்கத்தில் விஸ்வம்பரா திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.