சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களம் காணும் வேட்டையன் - ப்ரீ புக்கிங் வசூல் விவரம் !!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் களம் காணும் வேட்டையன் - ப்ரீ புக்கிங் வசூல் விவரம் !!

வேட்டையன்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கிய படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ரூ. 160 கோடி பட்ஜெட்டில் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கூட மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

ரஜினி ரசிகர்கள் எல்லோரும் வேட்டையன் பட ரிலீஸிற்காக தான் ஆவலாக இருகின்றனர்.

ரஜினி என்று பெயர் சொன்னாலே பாக்ஸ் ஆபிஸ் திணறும், இப்போது அவர் நடித்த படம் வெளியாக இருக்கிறது.

இதனால் பாக்ஸ் ஆபிஸில் படம் என்னென்ன வெற்றிகளை அடைய போகிறது என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங்கில் இப்படம் இதுவரை 7.5 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story