'வாடிவாசல்' படத்திலிருந்து விலகிய சூர்யா!!!

வாடிவாசல் படத்திலிருந்து விலகிய சூர்யா!!!

வாடிவாசல் படத்திலிருந்து விலகிய சூர்யா

சமீபத்தில் பட அப்டேட் வெளியிட்ட வெற்றிமாறன்.

வாடிவாசல் திரைப்படம்:

தமிழர் வீரத்தின் அடையாளமாக கருதப்படும் விளையாட்டுகளுள் ஒன்று, ஜல்லிக்கட்டு. இந்த விளையாட்டை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம்தான் வாடிவாசல் (Vaadivaasal). சூர்யா (Actor Suriya) தான் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என தயாரிப்பு தரப்பு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், தற்போது சூர்யாவால் ஏற்படும் கால தாமதத்தை பார்த்து யாரை வைத்தாவது வாடிவாசல் திரைப்படம் உருவானால் போதும் என்கிற நிலைக்கு தயாரிப்பாளர் தாணு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. தற்போது 'கங்குவா' படத்தினை முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் பாலிவுட்டில் மகாபாரத கதையை தழுவி உருவாகும் 'கர்ணா' படத்திலும் நடிக்க தயார் ஆகி வருகிறார்.

சூர்யாவுக்கு பதில் தனுஷ்:

இதனிடையே தற்போது வாடிவாசல் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிக்கப் போவதாக தகவல் ஒன்று தற்போது சினிமா வட்டாரத்தில் தீயாக பரவி வருகிறது. எனினும் கூடிய இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Tags

Next Story