ஹிட்டான ஸ்டார் திரைப்படத்தின் பாடல் "முதல் மழை போலவே நெஞ்சோடு சேர்ந்தாய்"

ஹிட்டான ஸ்டார் திரைப்படத்தின் பாடல் முதல் மழை போலவே நெஞ்சோடு சேர்ந்தாய்

ஸ்டார்

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபலமான இளம் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இப்படம் கடந்த பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இன்னும் வரவேற்பை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. படம் வெளியாகி சில நாட்கள் ஆனா நிலையில் பல திரையரங்குகளில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்த ஒருவன் சினிமாவில் நடிகனாக ஆசைப்படுகிறான், அவன் படும் கஷ்டங்கள் போராட்டத்தைப் பற்றி பேசக்கூடிய படமாக இது அமைந்துள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் படத்தின் இயக்குனரான இளன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு கவிதையை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

அதை தொடர்ந்து படத்தின் பாடல் ஆன "முதல் மழை" வீடியோ பாடல் youtube ல் வெளியாகியது அதிதி போஹங்கரை கவின் திருமணம் செய்யும் காட்சிகள் பாடலில் அமைந்துள்ளது. பாடலின் காட்சிகள் சமூக வலைதளங்களின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story