பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல மிஸ் கம்யூனிகேஷன் - ஹரிஷ் கல்யாண்
நடிகர் ஹரிஷ் கல்யாண்
திருச்சி மேரிஸ் திரையரங்கில் பார்க்கிங் திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் படத்தின் ப்ரோமோஷன்காக வந்தார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹரிஷ் கல்யாண் கூறியது,இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக சாதாரணமாக நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வுதான் இந்த படம். குறிப்பாக ஒவ்வொரு மனிதனிடமும் ஈகோ பிரச்சனை இருக்கும் அதன் வெளிப்பாடு, அதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து விரிவாக இந்த படம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய அளவிற்கு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவரும் இந்த படத்திற்கு முழுமையாக ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நான் இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிறேன் என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பிரச்சனையில் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் அந்த நிகழ்ச்சியில் இரண்டு வீடுகள் என பிரிக்கப்பட்டு அதில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது. அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கக்கூடியவர்களுக்கு இடையே பல மனஸ்தாபங்கள் நிலவி வருகிறது. நான் போட்டியாளராக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் இந்த நிகழ்ச்சிக்கும் பல வேறுபாடுகள் உள்ளது. இந்த நிகழ்ச்சி பல மிஸ் கம்யூனிகேஷன் இருப்பதாக எனக்கு தெரிகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அர்ச்சனா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அதேபோன்று இன்னும் சிலர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் தான் , நான் எனது படம் புரமோஷனுக்காக செல்கிறேன் என்றார்.