சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் !!

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட் !!

 சீரியல்

விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலை எபிசோட் இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக துவங்குகிறது. ஸ்ருதியின் அம்மா வருகைக்காக காத்திருந்த விஜயா அவர் வந்தவுடன் ரிப்பன் விட்டு திறந்து வைக்கிறாள்.

மீனாவின் வீட்டில் யாரும் வரவில்லையே என அண்ணாமலை மீனாவிடம் கேட்க நான் யாரையும் கூப்பிடவில்லை அவங்க இங்க வந்தா அவமானம் தான் படனும் என மீனா வருத்தமான சொல்கிறாள். பொறாமை புடிச்சவங்க அவங்க எதுக்கு வரணும் வந்து என்ன வாங்க போறாங்க ஸ்ருதி அம்மா பெரிசா ஏதாவது வாங்குவாங்க எனக்கு மீனா அம்மாவை இளக்காரமாக பேசுகிறாள். விஜயாவை அண்ணாமலை கண்டிக்கிறார்.

ஸ்ருதியின் அம்மா ஒன்றரை லட்சத்துக்கு ஏசி வாங்க அவருக்கு வரவேற்பு கிடைக்கிறது. ஆனால் மீனா கையால் முதல் வியாபாரம் செய்யக்கூடாது என ஸ்ருதியின் அம்மாவிடம் முதலில் பணத்தை வாங்கி பில் போட்டு கொடுக்கிறான் மனோஜ். மீனாவுக்கு வியாபாரம் செய்ய மனோஜ் தயங்குவதை பார்த்து பாட்டி மனோஜை திட்டி வாங்க சொல்கிறார். பாட்டி விஜயாவை தனியாக அழைத்து சென்று பயங்கரமாக திட்டுகிறார். எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த கத்துக்கோ மீனாவை இனி அவமானப்படுத்தி பேசினால் அவங்களுக்காக நான் வந்து நிற்பேன் என்ன பத்தி தெரியும் இல்ல என்னை மிரட்டி விட்டு செல்கிறார்.

மனோஜ் வியாபாரம் செய்த பணத்தை எண்ணிக்கொண்டிருக்கிறான் ரோகிணி அவனைப் பார்த்து சந்தோஷப்படுகிறாள் இந்த ஷோரூமை பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என இருவரும் பேசிக் கொள்கின்றன. அப்போது மனோஜ் அது எல்லாத்துக்கும் எனக்கு ஒரு ஐடியா இருக்கிறது என சொல்லி பழைய ஸ்டாப் அனைவரும் அழைத்து நீங்கள் இதுவரை இங்கே வேலை பார்த்தது போதும் இளைஞர்களை நான் வேலைக்கு சேர்க்கப் போகிறேன் என கர்வமாக பேசுகிறான் பழைய ஊழியர்கள் அனைவரையும் மிக வருத்தத்துடன் வெளியே சென்று விடுகிறார்கள்.

மனோஜ் அதட்டலாக பேசியதை பார்த்து ரோகினி சந்தோஷப்படுகிறார். இரவு ஷோரூம் முடிவு முடிந்ததும் மனோஜம் ரோகிணியும் வீட்டுக்கு வருகிறார்கள் காலையில் இருந்து நிறைய வேலை செய்ததால் மிகவும் அசதியாக இருக்கிறது என மனோஜ் சொல்லிக் கொண்டே வருகிறான். அவர்களுக்காக காத்திருந்த விஜயா எல்லோருடைய திருஷ்டியும் உன்மேல தான் இருக்கும் நான் போய் ஆரத்தி எடுத்துட்டு வரேன் என சந்தோஷமாக ஓடுகிறாள் இதுதான் இன்றைய சிறகடிக்க எபிசோடு முடிகிறது.

Tags

Next Story