சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய புரொமோ !!

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய புரொமோ !!

சிறகடிக்க ஆசை 

விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. நேற்றைய எபிசோட்டில் சத்யா மீது விஜயா கொடுத்துள்ள கேஸ் பற்றிய பிரச்சனை தான் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணாமலை பார்வதி வீட்டிற்கு வந்து விஜயாவிடம் கேஸ் வாபஸ் வாங்க சொல்கிறார்கள், ஆனால் விஜயா, முத்து-மீனா வீட்டைவிட்டு வெளியேற சென்றால் வாபஸ் வாங்குவேன் என கூறும் நிலையில் ஆனால் அண்ணாமலை அது முடியாது என கூறி வீட்டிற்கு வந்து முத்து-மீனாவிடம் இந்த விஷயத்தை கூறுகிறார். அதோடு ரவி மற்றும் ஸ்ருதி உங்களுக்கு ஆதரவாக நாங்கள் பேசவில்லை தவறு என முத்து-மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இன்னொரு பக்கம் சீதாவிற்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திவிடுகிறார். இன்று எபிசோட் இப்படி சில காட்சிகளுடன் முடிகிறது.

நாளைய எபிசோட் புரொமோவில், விஜயாவிடம் கேஸ் வாபஸ் வாங்க முத்து-மீனா அணுகிய வக்கீல் பரந்தாமன் வந்து பேசுகிறார். அவன் ஜெயில் செல்வதால் உங்களுக்கு என்ன லாபம், வாபஸ் வாங்குங்கள் என கூற, விஜயா அப்படி வாபஸ் வாங்கினால் எனக்கு என்ன லாபம் என கேட்கிறார். அதற்கு பரந்தாமன் கேஸ் வாபஸ் வாங்கினால் நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என கூற விஜயா யோசிக்கிறார். பணத்தை வாங்கிக்கொண்டு கேஸை வாபஸ் வாங்குவார அல்லது முத்து-மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பார்க்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags

Next Story