சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் சத்யாராஜ் களமிறங்கும் வெப்பன் !!

சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் சத்யாராஜ் களமிறங்கும் வெப்பன் !!

சத்யாராஜ்

குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்தியராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் திரில்லர் படம் வெப்பன். இந்த படம் குறித்து பேசும்போது சூப்பர் ஹியூமன் எலிமெண்டை அடிப்படையாகக் கொண்டு சயின்ஸ் ஃபிக்ஷன் ஆக்சன் திரில்லராக வெப்பன் படத்தை உருவாக்கியுள்ளோம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை பல திருப்பங்களுடன் கூடிய பரபரப்பான ஆக்சன் கதை இதில் இருக்கும் மில்லியன் ஸ்டூடியோவின் தயாரிப்பாளர்கள் எம்.எஸ் மன்சூர் எம்.எஸ் அப்துல் காதர் மற்றும் எம்.எஸ் அஜிஷ் ஆகியோரின் ஆதரவு இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை முதன்முறையாக சத்யராஜ் சூப்பர் ஹ்யூமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் எனக்கு ஊக்கம் கொடுத்தது நடிகர் வசந்த் ரவியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் நிச்சயம் கவனம் ஈர்க்கும் படத்தில் நீங்கள் எதிர்பாராத நிறைய திருப்பங்கள் இருக்கும் ராஜு மேனன் சார் இந்த படத்தில் ஸ்டைலான அதேசமயம் பவர்ஃபுல்லான வில்லனாக நடித்துள்ளார். தன்யா ஹோப்பின் நடிப்பு நிச்சயம் பாராட்டப்படும் இந்த படத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு எனது பணிவான நன்றிகளை படத்தில் இயக்குனர் சென்னியப்பன் தெரிவித்தார். மில்லியன் ஸ்டுடியோ தயாரித்திருக்கும் இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ள நிலையில் நடிகர் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜுமேனன், தன்யா ஹோப், ராஜு பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு கோபிகிருஷ்ணா பட தொகுப்பையும் கலை சுபேந்தர் பி எல் மேற்கொண்டனர். இப்படம் மே மாதம் திரையுலகில் ரீலிஸ் ஆகும் என படக் குழு தெரிவித்திருந்தனர்.

Tags

Next Story