வாக்களிக்க வந்த திமுக நிர்வாகி மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர் மீது வழக்கு

வாக்களிக்க வந்த திமுக நிர்வாகி மீது தாக்குதல்: அதிமுக பிரமுகர் மீது வழக்கு

காயமடைந்த நிர்வாகி

பேச்சிப்பாறை அருகே வாக்களிக்க திமுக நிர்வாகியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை, கடம்பமூடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பன்.கூலி தொழி லாளி.இவர் திமுக கிளைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி தற்போது ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துப்பரவு தொழிலாளியாக உள்ளதால் ஆல்பன் குடும்பத்துடன் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அவ்வப்போது சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம்.இந்த நிலயில் நேற்று மதியம் ஓட்டு போடுவதற்காக கடம்பமூடு பகுதியில் உள்ள அரசினர் உண்டு, உறைவிட மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முன்பு ஆல்பன் சென்றார்.அப்போது அங்கு வந்த அதிமுக பிரமுகர் அல்போன்ஸ் திடீரென் ஆல்பனை தடுத்து நிறுத்தி எதற்கு ஓட்டு போட வந்தாய் என்று கேட்டு சராமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் மயங்கி கீழே க விழுந்த ஆல்பனை உடனடியாக போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இந்த நிலையில் ஆல்பன் கொடுத்த புகாரின் பேரில் பேச்சிப்பாறை போலீசார் அதிமுக பிரமுகர் அல்போன்ஸ் மீது இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story