மாங்காடு அருகே வட மாநில வாலிபர் இரும்பு ராடால் அடித்து கொலை

மாங்காடு அருகே வட மாநில வாலிபர் இரும்பு ராடால் அடித்து கொலை

வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் மரக்கடை 

செல்போன், சார்ஜரை எடுத்து ஒளித்து வைத்து கொண்டு கிண்டல் செய்ததால் நேர்ந்த சோகம்





மாங்காடு, பரணிபுத்தூர், லீலாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவர் அதே பகுதியில் மரக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் இங்கு தங்கி பணிபுரிந்து வந்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அணில் பாண்டே(43), இங்கு கிண்டியைச் சேர்ந்த குமார்(48), என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். குமாரின் செல்போனை அணில் பாண்டே எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு தராமல் கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குமார் செல்போன் மற்றும் சார்ஜரை கேட்ட நிலையில் கொடுக்காமல் கிண்டல் செய்த நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமார் நேற்று இரவு தூங்கி கொண்டிருந்த அனில் பாண்டேவின் தலையில் இரும்பு ராடால் ஓங்கி அடித்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற ஊழியர்கள் அங்கிருந்து அலறடித்து ஓடினர். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு இறந்து போன அணில் பாண்டே உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கு காரணமான குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சக ஊழியரின் செல்போன், சார்ஜரை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு கிண்டல் செய்த சம்பவத்தில் வட மாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story