ஆந்திராவிலிருந்து 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தல்
ஆந்திராவிலிருந்து 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கடத்தல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மினி வேனில் கடத்திய ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்.
எஸ்பி தனிப்படை போலீசார் 2 பேரை கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருக்கம்பட்டு பகுதியில் மாவட்ட சிறப்பு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற ஆந்திர பதிவெண் கொண்ட மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 2 டன் எடை கொண்ட 17 செம்மரக்கட்டைகள் சென்னைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.இதனையடுத்து செம்மரக்கட்டைகளுடன் வேன் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து திருத்தணி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருத்தணி வனச்சரகர் சாரதி வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேரியிலிருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தெரியவந்தது . மேலும் கடத்தலில் ஈடுபட்ட வேன் டிரைவர் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சேர்ந்த கணேசன் (45), ஜோதீஸ்வரர் ரெட்டி (44) ஆகிய 2 பேரை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.