சிறார் வதையில் ஈடுபட்டவருக்கு 14 ஆண்டு சிறை

சிறார் வதையில் ஈடுபட்டவருக்கு 14 ஆண்டு சிறை

மகளிர் நீதிமன்றம் 

அரியலூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயன். இவர் அரியலூர் அருகேயுள்ள கிராமத்தை ஒருவரது வீட்டில் சிசிடிவி கேமரா சரி செய்ய சென்றுள்ளார். அப்போது தனியாக இருந்த அந்த வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியை கடந்த 18.09.2021 அன்று வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story