சேலம் மாவட்டத்தில் 2 பஞ்சாயத்து பெண் தலைவர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

சேலம் மாவட்டத்தில் 2 பஞ்சாயத்து பெண் தலைவர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

சேலம் மாவட்டத்தில் 2 பஞ்சாயத்து பெண் தலைவர்கள் அதிரடியாக பதவி நீக்கம் - அரசிதழில் வெளியானது

சேலம் மாவட்டத்தில் 2 பஞ்சாயத்து பெண் தலைவர்கள் அதிரடியாக பதவி நீக்கம் அரசிதழில் வெளியானது
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி என்பவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்கரை, மண்கரை அமைக்கும் பணிகளுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு இறந்து போன தனது மாமனார் கந்தசாமி என்பவர் பெயரில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து பெறப்பட்டதாக விசாரணை அலுவலரின் கள ஆய்வில் கண்டறியப்பட்டது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக தெரிவித்தும் ஆஜராகாமல் அலட்சியபடுத்தியதாலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றும் பொது மக்களின் வேலை அட்டைகளை அவர்களிடம் அளிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காகவும் ஊராட்சியின் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (II)-ல் மாவட்ட கலெக்டருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பு செய்யப்படுகிறது. இதேபோல் தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா என்பவர் தவறான ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றி, வேலை உத்தரவு வழங்காமல் 3 உள்ள பணிகளை ஒப்பந்ததாரர் மேற்கொள்ள அனுமதித்ததற்கும், ஒப்பந்ததாரரிடம் திட்டபணி மேற்கொள்ளப் பட்டமைக்கான பட்டியல் தொகை வழங்க லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். மேலும் அமுதா மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சியின் நிர்வாக நலனை கருத்தில் கொண்டு தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் அமுதா என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிப்பு செய்யப்படுகிறது. இந்த பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு நாள் முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story