வேலூரில் பைக் திருடிய 2 பேர் கைது

வேலூரில் பைக் திருடிய 2 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட பைக்

வேலூர் காட்பாடி பகுதியில் தொடர் டூ வீலர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப் போவது தொடர்பாக மாவட்ட எஸ்பி மணிவண்ணன், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வனுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் காட்பாடி டிஎஸ்பி சரவணன் மேற்பார்வையில் காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் திருவலம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது 2 பேர் ஒரு மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் விருதம்பட்டு வெண்மணி மோட்டூரை சேர்ந்த ராஜா என்ற விருதம்பட்டு ராஜா (37), கரிகிரியைச் சேர்ந்த முருகன் என்ற கரிகிரி முருகன் (36) எனத் தெரியவந்தது. 2 பேரும் கூட்டாக சேர்ந்து பிரியதர்ஷன் மோட்டார்சைக்கிள் உள்பட காட்பாடி, கே.வி.குப்பம், திருவலம் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைதான அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story