சேலம் சீலநாயக்கன்பட்டி, மணியனூரில் 2 பேர் தற்கொலை
சேலம் சீலநாயக்கன்பட்டி, மணியனூரில் 2 பேர் தற்கொலை
சேலம் சீலநாயக்கன்பட்டி, மணியனூரில் 2 பேர் தற்கொலை
சேலம் சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (35) கார் டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மோகன் வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் சேலம் மணியனூர் முத்து பிளாட் பகுதியைச்சேர்ந்தவர் பிரபுராஜ் (38). நெத்திமேட்டில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . மேலும் இவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags
Next Story