கேரளாவிற்கு கடத்திய 210 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மண்ணெண்ணெய்
நித்திரவிளை அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 210 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
நித்திரவிளை இன்ஸ் பெக்டர் ரமேஷ் மோகன், ஏட்டுகள் சௌந்தர், ஜாண் பென்சிங் மற்றும் போலீசார் நேற்று நித்திரவிளை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடு பட்டிருந்தனர். அப் போது கேரளா நோக்கி ஒரு சொகுசு கார் வந்துள்ளது.
சந்தேகமடைந்த போலீ சார் அந்த காரை நிறுத்திசோதனை செய்தபோது, அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 6 கேன்களில் படகிற்கு அரசு மானிய விலையில் வழங்கும் 210 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டறியப்பட் டது.
இதையடுத்து போலீ சார் மண்ணெண்ணெய் மற்றும் சொகுசு கார் ஆகிய வற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரை ஓட்டி வந்த இனையம் புத்தன் துறையை சேர்ந்த சேகர் என்பவரையும் பிடித்து நித் திரவிளை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story