சிவகாசி அருகே 22 டன் பேரியம் நைட்ரேட் பறிமுதல்...

சிவகாசி அருகே 22 டன் பேரியம் நைட்ரேட் பறிமுதல்...

பறிமுதல் செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் மூட்டைகள் 

சிவகாசி அருகே தாயில்பட்டியில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசு மூலப் பொருளான 22 டன் பேரியம் நைட்ரேட் வெடிபொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

.பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் விதிமீறல்கள், சட்டவிரோ உற்பத்தி,தடை செய்யப்பட்ட வெடிபொருள் பயன்பாடு குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி தாசில்தார் திருப்பதி தலைமையிலான குழுவினர் தொடர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவிற்கு தாயில்பட்டி பகுதியில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் எனும் பச்சை உப்பு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தாயில்பட்டியில் உள்ள சிவகாசியை சேர்ந்த மகேந்திரன் நடத்தி வரும் பேன்சி ரக பட்டாசு தயாரிக்க தேவையான அட்டை குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை செய்த போது தலா 50 கிலோ எடை உள்ள 455 மூடைகளில் 22 டன் பேரியம் நைட்ரேட் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.பேரியம் நைட்ரேட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள்,இதுகுறித்து விசாரிக்க மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு துறைக்கு (பெசோ) பரிந்துரை செய்தனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீசார் மகேந்திரன் மீது வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story