சிறார் வதை வழக்கில் 27 ஆண்டு சிறை
நீதிமன்றம்
சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்வதற்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் சிறப்பு போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சங்கருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
Next Story