3 லட்ச ரூபாய் மோசடி -.பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை!

3 லட்ச ரூபாய் மோசடி -.பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை!

வங்கி ஊழியர் எனக் கூறி 3 லட்ச ரூபாய் மோசடி -.பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை!

வங்கி ஊழியர் எனக் கூறி 3 லட்ச ரூபாய் மோசடி -.பணத்தை திருப்பி கேட்டவருக்கு அடி-உதை!
கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ்.இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவரது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் உப்பிலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாவித்திரி என்ற பெண் தான் வங்கியில் பணி புரிவதாக கூறி தங்கராஜிடம் இருந்து மூன்று லட்ச ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.இரண்டு சதவீத வட்டி தருவதாக கூறி பணத்தை பெற்ற பின் திருப்பி தராமல் இழுத்தடித்த காரணமாக உடனடியாக கொடுத்த தொகையை திருப்பி தர தங்கராஜ் வலியுறுத்தி உள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி தனது மகன் ஜீவானந்தம் மற்றும் நண்பர் மகேஷ் குமார் ஆகியோருடன் இணைந்து தங்கராஜை தாக்கியுள்ளனர்.இது குறித்து அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story